நீங்கள் எங்கள் கூட்டாளர். மோசடியைத் தடுக்க Western Unionகடுமையாக உழைக்கும் அதே வேளையில், மோசடியைத் தடுப்பது அனைவரின் பொறுப்பு என்றும் நாங்கள் நம்புகிறோம். உங்களின் சிறந்த தற்காப்பு என்பது விழிப்புடன் இருப்பது, நீங்கள் கற்பது மற்றும் எங்கள் தகவல் உதவிக்குறிப்புகளுடன் சிறந்த முடிவெடுத்து அதைப் பயன்படுத்துவதும் ஆகும். பாதிப்புக்கு உள்ளாகாதீர்கள்: தாமதிக்காமல், மோசடி முயற்சிகள் அல்லது மோசடி செய்பவரின் எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறியும் விதம் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
உறவுமுறை மோசடி
மோசடி செய்பவர்கள் ஆன்லைனில் தொடர்பு கொண்டு போலி உறவுகளை உருவாக்குவதன் மூலம் நம்பிக்கையைப் பெறுகிறார்கள். நம்பிக்கையை ஏற்படுத்திய பிறகு, மோசடி செய்பவர்கள் பல்வேறு பயணச் செலவுகள், கட்டணம் அல்லது பிற அவசரச் செலவுகளுக்குப் பணம் கேட்கிறார்கள். நீங்கள் ஆன்லைனில் அன்பைத் தேடுகிறவர் என்றால் உங்களுடன் உறவில் உள்ளவர் தான் யாரென காட்டிக்கொள்கிறாரோ அவ்வாறே இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கான அறிகுறிகளின்பால் விழிப்புடன் இருங்கள்.
இணையத்தில் வாங்குதலில் மோசடி
மொபைல் ஃபோன்கள், நிகழ்வுக்கான டிக்கெட்டுகள் மற்றும் கார்கள் போன்ற பொருட்களை விளம்பரப்படுத்த மோசடி செய்பவர்கள் இணையதளங்கள் அல்லது ஆன்லைன் விளம்பரங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆன்லைன் விளம்பரத்திற்கு எதிர்வினையாகப் பணம் அனுப்பும் போது கவனமாக இருக்கவும்.
முன் கட்டணம்/ப்ரீ-பேமெண்ட் – மக்காவ் மோசடிகள்
வங்கி, அரசு அல்லது சட்ட அமலாக்க ஏஜென்சி அல்லது கடன் வசூலிக்கும் ஒரு அதிகாரியாக நடிக்கும் ஒருவரிடமிருந்து ஏமாற்றப்படுபவருக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. ஏமாற்றப்படுபவரிடம் பணம் செலுத்த வேண்டும் அல்லது செலுத்தப்படாத அபராதம் இருப்பதாக மோசடி செய்பவர் கூறுவார். கதையை மிகவும் சட்டபூர்வமானதாகக் காட்டிக் கொள்வதற்குத் தனிப்பட்ட தகவல் மற்றும் முக்கியமான விவரங்கள் வழங்கப்படலாம். சிக்கல்களைச் சரிசெய்யவும், பணப் பரிமாற்றம் மூலம் உடனடியாகப் பணம் செலுத்தப்படாவிட்டால், அச்சுறுத்தல் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்கவும் உடனடி கட்டணம் கோரப்படுகிறது.
மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
நீங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கருதுகிறீர்களா?
அதைப் புகாரளிக்கவும். நீங்கள் எங்களுக்கு உதவும் அதே நேரத்தில் எதிர்காலத்தில் மற்றவர்கள் மோசடிக்கு உள்ளாகாமல் இருக்க உதவலாம்.
எங்கள் மோசடிப் புகார் ஹாட்லைனை
1800 816332 என்ற எண்ணில் அழைக்கவும்
ஒரு மோசடி கிளைமைப் பதிவு செய்யவும்
அதிகாரிகளிடம் புகாரளிக்கவும்
சந்தேகத்திற்குரிய மின்னஞ்சலை spoof@westernunion.com என்ற முகவரிக்கு அனுப்பவும்–உள்ளடக்கங்களை வெட்டி ஒட்டாதீர்கள், ஏனெனில் ஆதாரத்தைப் பற்றிய முக்கியமான கண்காணிப்புத் தகவல்கள் இழக்கப்படும்.
மேலும் அறியவும்ஏமாற்றப்படுபவர் ஒரு வேலை குறித்த இடுகைக்குப் பதிலளித்தார், போலியான வேலைக்கு அமர்த்தப்பட்டு வேலை தொடர்பான செலவுகளுக்குப் போலிக் காசோலையைப் பெறுவார். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையானது ஏமாற்றப்படுபவர் செய்த செலவைவிட அதிகமாக இருப்பதால், மீதித் தொகையை அவர் பணப் பரிமாற்றம் மூலம் திருப்பி அனுப்புவார். பணமில்லாமல் காசோலை திரும்புவதுடன், அனுப்பிய தொகை முழுவதையும் ஏமாற்றப்படுபவர் இழக்கிறார்.
இதனுடன் தொடர்புடையவை:
மர்மமான ஷாப்பிங் மோசடி, போலிக் காசோலை மோசடி
கட்டுரை:
3 வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் ஏமாற்றப்படாமல் இருக்க உதவும் உதவிக்குறிப்புகள்
ஒருபோதும் வழங்கப்படாத நிதிச் சேவைகளுக்கு முன்கூட்டியே கட்டணத்தைச் செலுத்துமாறு ஏமாற்றப்படுபவரிடம் கேட்கப்படுகிறது. ஏமாற்றப்படுபவர்கள் பெரும்பாலும் பல்வேறு முன்கூட்டிய கட்டணங்களைச் செலுத்துவதற்காகத் தொடர்ச்சியான பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். பொதுவான முறைகளில் பின்வருவன அடங்கும்: கிரெடிட் கார்டு, மானியங்கள், கடன்கள், மரபு வழி அல்லது முதலீடு.
இதனுடன் தொடர்புடையவை:
வரி மோசடி, டெலிமார்க்கெட்டிங், குடியேற்றத்திற்கான மோசடி, தொண்டுநிறுவன மோசடி, சோசியல் நெட்வொர்க்கிங் மோசடி, போலிக் காசோலை மோசடி, முதியவர்களைக் குறிவைக்கும் மோசடி
கட்டுரைகள்:
முன் கட்டணம் மற்றும் முன்பணம் செலுத்தும் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் 4 வழிகள், மாணவர் மோசடிகள் குறித்த ஆய்வு
(எ.கா. செல்லப்பிராணிகள், கார்கள்) போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட பொருளை வாங்குவதற்குப் ஏமாற்றப்படுபவர் பணம் அனுப்புகிறார். பொருட்கள் பெரும்பாலும் Craigslist, eBay, Alibaba போன்றவற்றில் விளம்பரப்படுத்தப்படுகின்றன. பணம் அனுப்பப்பட்ட பிறகு, ஏமாற்றப்படுபவர் அந்தப் பொருளை ஒருபோதும் பெறமாட்டார்.
இதனுடன் தொடர்புடையவை:
அதிகப் பணம் செலுத்தும் மோசடி, வாடகை சொத்து மோசடி, போலிக் காசோலை மோசடி
கட்டுரை:
மோசடி குறித்த எச்சரிக்கை: இணையத்தில் நாய்க்குட்டி வாங்கும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன, இந்த விடுமுறைக் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உதவிக்குறிப்புகள், கோவிட்-19 நுகர்வோர் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
இந்த மோசடி அவசரகால மோசடியின் ஒரு மாறுபாடு ஆகும்.
ஆபத்தில் இருக்கும் பேரக்குழந்தை அல்லது ஒரு மருத்துவ நிபுணர், சட்ட அமலாக்கத்துறை அதிகாரி அல்லது வழக்கறிஞர் போன்ற அதிகாரம் கொண்ட நபர் போல் நடிக்கும் தனிநபர் ஏமாற்றப்படுபவரைத் தொடர்பு கொள்கிறார்.
பேரக்குழந்தைக்கு உடனடியாகப் பணப் பரிமாற்றம் மூலம் பணம் அனுப்பத் தேவைப்படும் அவசரச் சூழ்நிலை அல்லது அவசரநிலை (ஜாமீன், மருத்துவச் செலவுகள், அவசரப் பயண நிதி) நிலவுவதாக மோசடி செய்பவர் விவரிக்கிறார்.
எந்த அவசரநிலையும் ஏற்படவில்லை, பேரக்குழந்தைக்கு உதவி செய்வதற்காகப் பணம் அனுப்பிய ஏமாற்றப்படுபவர் பணத்தை இழக்கிறார்.
இதனுடன் தொடர்புடையவை:
முன் கட்டணம் / ப்ரீ-பேமெண்ட் மோசடி, அவசரநிலை மோசடி
கட்டுரை:
முதியவர்களைக் குறிவைக்கும் மோசடியிலிருந்து பாதுகாக்க உதவும் 6 உதவிக்குறிப்புகள் மற்றும் நுண்ணறிவுகள்
ஏமாற்றப்படுபவருக்கு அவர்கள் லாட்டரி, பரிசு அல்லது ஸ்வீப்ஸ்டேக்குகளை வென்றுள்ளதாகவும், வெற்றிக்கான வரிகள் அல்லது கட்டணங்களை ஈடுகட்ட பணம் அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஏமாற்றப்படுபவர் வென்ற பணத்தின் ஒரு பகுதியை காசோலையாகப் பெறக்கூடும், காசோலை கணக்கில் செலுத்தப்பட்டு, பணம் அனுப்பப்பட்டவுடன், பணம் இல்லாமல் காசோலை திரும்பிவிடும்.
இதனுடன் தொடர்புடையவை:
முன் கட்டணம் / ப்ரீ-பேமெண்ட் மோசடி, போலிக் காசோலை மோசடி
கட்டுரைகள்:
லாட்டரி மோசடிகளைத் தவிர்ப்பதற்கான 7 உதவிக்குறிப்புகள் , ஸ்க்ராட்ச் செய்து பணம் வெல்லும் மோசடி, ஸ்வீப்ஸ்டேக்ஸ் மோசடிகளில் சிக்குவதைத் தவிர்க்கவும்
சமூக ஊடகங்கள், ஆன்லைன் மன்றம் அல்லது டேட்டிங் இணையதளம் மூலம் ஆன்லைனில் அடிக்கடி சந்திக்கும் ஒருவருடன் தனிப்பட்ட உறவு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் நம்புகிறார்கள். பெரும்பாலும் வருங்கால இணையர் என்று குறிப்பிடப்படுவதால், ஏமாற்றப்படுபவர் உணர்ச்சிப்பூர்வமாக பிணைப்பு உள்ளதாக உணர்கிறார்.
இதனுடன் தொடர்புடையவை:
சமூக நெட்வொர்கிங் மோசடி, இராணுவம், அவசரநிலை மோசடி, மிரட்டிப் பணம் பறித்தல்
கட்டுரைகள்:
2016 ஆம் ஆண்டில் இணையத்தில் அன்பைத் தேடுகிறீர்களா
இந்த மோசடி அவசரகால மோசடியின் ஒரு மாறுபாடு ஆகும்.
ஆபத்தில் இருக்கும் பேரக்குழந்தை அல்லது ஒரு மருத்துவ நிபுணர், சட்ட அமலாக்கத்துறை அதிகாரி அல்லது வழக்கறிஞர் போன்ற அதிகாரம் கொண்ட நபர் போல் நடிக்கும் தனிநபர் ஏமாற்றப்படுபவரைத் தொடர்பு கொள்கிறார்.
பேரக்குழந்தைக்கு உடனடியாகப் பணப் பரிமாற்றம் மூலம் பணம் அனுப்பத் தேவைப்படும் அவசரச் சூழ்நிலை அல்லது அவசரநிலை (ஜாமீன், மருத்துவச் செலவுகள், அவசரப் பயண நிதி) நிலவுவதாக மோசடி செய்பவர் விவரிக்கிறார்.
எந்த அவசரநிலையும் ஏற்படவில்லை, பேரக்குழந்தைக்கு உதவி செய்வதற்காகப் பணம் அனுப்பிய ஏமாற்றப்படுபவர் பணத்தை இழக்கிறார்.
இதனுடன் தொடர்புடையவை:
முன் கட்டணம் / ப்ரீ-பேமெண்ட் மோசடி, அவசரநிலை மோசடி
கட்டுரை:
முதியவர்களைக் குறிவைக்கும் மோசடியிலிருந்து பாதுகாக்க உதவும் 6 உதவிக்குறிப்புகள் மற்றும் நுண்ணறிவுகள்
மோசடி குறித்த உங்கள் அறிவை இப்போது சோதிக்கவும்
புத்திசாலிகள் ஒவ்வொரு நாளும் மோசடிகளில் விழுகின்றனர். பணப் பரிமாற்ற மோசடி பற்றிய உங்கள் அறிவைச் சோதித்து, உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை அறியவும்.
மோசடி குறித்த உங்கள் அறிவை இப்போது சோதிக்கவும்
புத்திசாலிகள் ஒவ்வொரு நாளும் மோசடிகளில் விழுகின்றனர். பணப் பரிமாற்ற மோசடி பற்றிய உங்கள் அறிவைச் சோதித்து, உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை அறியவும்.
கற்றல் மற்றும் விழிப்புணர்வு மூலம் பணப் பரிமாற்ற மோசடிகளினால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் பாதுகாக்க Western Union உதவுகிறது.
எங்கள் எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பின்பற்றவும்
பணத்திற்காக நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள் மேலும் உங்கள் பணத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பும் போது நீங்கள் நம்பகமான ஒரு நிறுவனத்தையே நாட விரும்புகிறீர்கள். அதனால்தான் உங்களை மோசடியிலிருந்து பாதுகாக்க நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
ஸ்டாண்ட் கார்டு—உதவிக்குறிப்புகள், பிரசுரங்கள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களுடன், உடனடியாக மோசடியின் எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறியவும்.
திறம் மிக்கவராக இருங்கள், கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மோசடியைத் தடுத்து நிறுத்துங்கள்
தகவலறிந்து பாதுகாப்பாக இருங்கள். உங்களிடம் எந்த அளவுக்கு அதிகமான தகவல்கள் இருக்கிறதோ, அந்த அளவுக்குக் குற்றவாளிகளிடமிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். மோசடியைப் புகாரளிக்கவும், சமீபத்திய மோசடிகளைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பெற்ற நிலையில் இருக்கவும், மேலும் இந்தக் கூடுதல் ஆதாரங்களைக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகளை எவ்வாறு கண்டறிவது என்பதை அறியவும்.