நீங்கள் மோசடிக்கு ஆளாகியிருந்தால், முன்முயற்சியுடன் செயல்பட்டு உங்கள் சிக்கலை Western Union-இடமும், சட்ட அமலாக்கத் துறையினரிடமும் பிற அதிகாரிகளிடமும் புகாரளிக்கவும். இவை மோசடியைத் தடுப்பதற்கும் மற்றவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதற்குமான முக்கியமான படிநிலைகளாகும்.
Western Union ஆனது மோசடியை எதிர்த்துப் போராடுவதற்கும், நுகர்வோர்கள் பாதிப்பிற்குள்ளாகாமல் தடுக்க உதவுவதற்கும் நிதி, பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற கணிசமான ஆதாரங்களைப் பயன்படுத்துகிறது.
எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் நபர்கள் மீது அக்கறை கொள்கிறோம்—அவர்கள் பணத்தை ஈட்டுவதற்காகக் கடினமாக உழைப்பதால், நாங்கள் அதன் மீதான மோசடியை எதிர்த்துப் போராடுகிறோம், மேலும் பல்வேறு வகையான நுகர்வோர் மோசடிகள் பற்றியும் அவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் விதம் பற்றியும் அவர்களுக்குக் கற்பிக்க உதவுகிறோம். ஊடகங்கள் மற்றும் நுகர்வோர் பரிந்துரைக் குழுக்களுடன் இணைந்து நுகர்வோருக்குக் கற்பிப்பதன் மூலம், சந்தேகத்திற்கிடமில்லாத நபர்கள் நுகர்வோர் மோசடிக்கு ஆளாவதைத் தடுக்க உதவலாம்.
சில வகையான மோசடி செய்பவர்களிடம் பணத்தை இழந்தவர்கள் குறித்து கேள்விப்படும் போது, Western Union-ஐச் சேர்ந்தவர்கள் என்ற முறையில் மிகவும் கவலையடைகிறோம். குறிப்பாக, நுகர்வோரை ஏமாற்றுவதற்கான வழியாக குற்றவாளி முறையான சேவையைப் பயன்படுத்தியிருப்பதைக் குறித்து அறியும் போது மிகுந்த வேதனையடைகிறோம்.
எங்கள் மோசடி ஹாட்லைனை அழைக்கவும்
எங்கள் பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்திய போது மோசடியான பணப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது என எண்ணினால், உடனடியாக எங்களை அழைக்கவும். நடந்தவற்றை எங்களிடம் கூறவும். உதவ விரும்புகிறோம் – நீங்கள் எங்களைத் தொடர்பு கொண்டால் மட்டுமே எங்களால் உதவ முடியும். இது எளிதானது – 1800 816332என்பது மலேசியாவில் எங்கள் கட்டணமில்லா எண்ணாகும்.
பரிமாற்றத் தொகை செலுத்தப்படவில்லை என்றால், நாங்கள் பரிவர்த்தனையை நிறுத்தி உங்கள் பணத்தைத் திரும்ப அளிக்கலாம்.
உங்கள் பரிவர்த்தனைக்கான பணம் செலுத்தப்பட்டுவிட்ட நிலையை Western Union-க்குத் தெரியப்படுத்த விரும்பினால், எங்கள் மோசடித் துறையிடம் நீங்கள் கிளைமுக்கு பதிவு செய்யலாம்
மோசடித் துறையிடம் புகாரளிக்க1800 816332 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது எங்கள் ஆன்லைன் மோசடி கிளைம் படிவத்தைப் பயன்படுத்தவும். நாங்கள் பெறும் புகார்கள், எதிர்காலத்தில் மோசடிகளைச் சிறப்பாகக் கண்காணிக்கவும், மற்றவர்கள் ஏமாற்றப்பட்டாமல் தடுக்கவும் உதவுகின்றன.
மோசடியைப் புகாரளிப்பது அதிக விழிப்புணர்வு மற்றும் சிறந்த கற்றலுக்கு வழிவகுக்கும். நீங்கள் ஏமாற்றப்பட்டதாக எண்ணினால், உங்கள் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மற்ற நுகர்வோர் பாதுகாப்பு ஆதாரங்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
மோசடியைப் புகாரளிப்பது மிகவும் முக்கியமானது: இது மற்ற நுகர்வோருக்குப் புரிதலை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்குச் சந்தையில் ஏற்பட்ட சமீபத்திய மோசடிகளைப் பற்றிய தகவலை வழங்கவும் உதவும். உலகெங்கிலும் உள்ள போலீஸ் அமைப்புகளுடன் நாங்கள் அடிக்கடி வேலை செய்கிறோம், ஆனால் சட்ட அமலாக்கம் எங்கள் பணி இல்லை என்பதையும் எங்கள் ஏஜெண்டுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிப்பதில் உள்ளார்ந்த ஆபத்துகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக, அத்துடன் பெறுநர்கள் எப்போது வேண்டுமானாலும், பரந்த எண்ணிக்கையிலான இடங்களிலிருந்து நிதியைப் பெற முடியும் என்பதன் காரணமாக, எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது விசாரணை மற்றும் வழக்குத் தொடர சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம்.
அறிவு உங்களைப் பாதுகாக்கும். பணத்திற்காக நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள் மேலும் உங்கள் பணத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பும் போது நீங்கள் நம்பகமான ஒரு நிறுவனத்தையே நாட விரும்புகிறீர்கள். அதனால்தான் உங்களை மோசடியிலிருந்து பாதுகாக்க நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
எங்கள் மோசடிப் புகார் ஹாட்லைனை 1800 816332 என்ற எண்ணில் உடனடியாக அழைக்கவும். நீங்கள் பணம் அனுப்பியிருந்தாலும், பெறுநருக்கு அவை இன்னும் சென்றடையவில்லை என்றால், நீங்கள் பரிவர்த்தனையை நிறுத்தலாம்
எங்கள் மோசடித் துறையிடம் 1800 816332 என்ற எண்ணில் நீங்கள் கிளைமைப் பதிவுசெய்த பிறகு, அல்லது எங்கள் ஆன்லைன் மோசடி கிளைம் படிவத்தைப் பயன்படுத்தி உங்கள் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். கோரிக்கையின் பேரில் சட்ட அமலாக்கத்துறையுடன் Western Unionநேரடியாக வேலை செய்கிறது.
உலகெங்கிலும் உள்ள போலீஸ் அமைப்புகளுடன் நாங்கள் அடிக்கடி வேலை செய்கிறோம், ஆனால் சட்ட அமலாக்கம் எங்கள் பணி இல்லை என்பதையும் எங்கள் ஏஜெண்டுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்குக் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிப்பதில் உள்ளார்ந்த ஆபத்துகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் காரணமாக, அத்துடன் பெறுநர்கள் எப்போது வேண்டுமானாலும், பரந்த எண்ணிக்கையிலான இடங்களிலிருந்து நிதியைப் பெற முடியும் என்பதன் காரணமாக, எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது விசாரணை மற்றும் வழக்குத் தொடர சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம்.
நீங்கள் பணப் பரிமாற்றம் செய்தும், இன்னும் பணம் பெறப்படவில்லை என்றால், பரிவர்த்தனையை நிறுத்த 1800 816332 என்ற எங்கள் மோசடி ஹாட்லைனை அழைக்கவும்.
பெறுநரால் பணம் பெறப்படவில்லை என்றால், பரிவர்த்தனைக் கட்டணம் உட்பட முழுப் பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள்.
உங்கள் பணம் பெறுநரால் பெறப்பட்ட பிறகு, ஏமாற்றப்பட்டதாக நீங்கள் சந்தேகித்தால், Western Union-இல் அதிகாரப்பூர்வ மோசடி கிளைமைப் பதிவுசெய்து, உங்கள் நிலைமையை சட்ட அமலாக்கத்துறையிடம் புகாரளிக்கும்படி அறிவுறுத்துகிறோம்.
பணத்தை திருப்பி அளிக்க அனுமதிக்கப்படுமா என்பதைத் தீர்மானிக்க Western Union-க்குப் புகாரளிக்கப்பட்ட அனைத்து புகார்களும் மதிப்பாய்வு செய்யப்படும். மோசடியான பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து, அவை எங்கள் கணினிகளில் ஊடுருவிச் செல்வதைத் தடுக்க நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம், ஆனால் மோசடி செய்பவர்களின் உத்திகள் தொடர்ந்து மாறிக்கொண்டே போகின்றன. மோசடியை நிறுத்துவதற்கான சிறந்த வழி, மோசடி செய்பவர்கள் மற்றும் மோசடிகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைக் கற்றுக்கொள்வது தான்.
எங்கள் வாடிக்கையாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடிக் கலைஞர்களிடம் இழக்காமல் இருப்பதற்கு நாங்கள் உறுதியாகச் செயல்படுகிறோம். அதனால்தான் இது நிகழாமல் தடுக்கப் பல வழிகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம், அவை உள்ளடக்குவன:
அந்த அசல் மின்னஞ்சலை spoof@westernunion.comஎன்ற முகவரிக்கு அனுப்பவும். இது கிளைமைப் பதிவு செய்யாது என்பதை நினைவில் கொள்ளவும்; நீங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதாக எண்ணினால், எங்கள் மோசடி ஹாட்லைனை அழைத்து குற்றத்தைப் புகாரளித்த பின்னர் உங்கள் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனத்தில் கிளைமைப் பதிவு செய்யவும்.
மேலும், மோசடிகள் மற்றும் ஃபிஷிங் மின்னஞ்சல்கள் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். . பொதுவான மோசடிகளைப் பற்றி வாய்மொழியாக அறிவிப்பது ஒரு சக்திவாய்ந்த வழியாகும். கோரப்படாத ஃபிஷிங் மின்னஞ்சல்களை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால், மற்றவர்களும் கூட அதைப் பெறலாம்.
மோசடிகள் பல வடிவங்களை எடுக்கலாம், மேலும் குற்றவாளிகள் தொடர்ந்து தங்கள் உத்திகளைத் தொடர்ந்து மாற்றுவதன் மூலம் எப்போதும் ஒரு படி மேலே இருப்பர். மோசடி வகைகள்பற்றி மேலும் அறிக.