< சட்டப்பூர்வமானது

மலேசியாவுக்கான குக்கீகள் தகவல்கள்

கவனித்தில் கொள்ளவும் – Western Union-இன் இணையதளங்களில் ஜனவரி 27, 2016 நிலவரப்படி குக்கீகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை இந்தப் பக்கம் விளக்குகிறது.

 

Western Union மூலம் குக்கீகளின் பயன்பாடு

குக்கீகள் என்பவை நீங்கள் பார்வையிடும் வலைத்தளங்கள் மற்றும் நீங்கள் திறக்கும் சில மின்னஞ்சல்கள் மூலம் உங்கள் கணினியில் வைக்கப்படும் சிறிய உரைக் கோப்புகள் ஆகும். அவை, இணையதளங்களை இயங்க வைப்பதற்கும் அல்லது திறமையாகச் செயல்படுவதற்கும், அத்துடன் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் தகவல்களை வழங்குதலுக்கும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உங்கள் குக்கீ விருப்பங்களை நினைவில் வைத்துக் கொள்ள நாங்கள் ஒரு குக்கீயைப் பயன்படுத்துகிறோம். அதாவது:

  • நீங்கள் உங்கள் அனைத்துக் குக்கீகளையும் நீக்கினால், உங்கள் விருப்பங்களையும் நீங்கள் புதுப்பிக்க வேண்டும்
  • நீங்கள் வேறு சாதனம், கணினிச் சுயவிவரம் அல்லது உலாவியைப் பயன்படுத்தினால், உங்கள் விருப்பங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்

குக்கீகள் பற்றிய மேலும் விரிவான தகவல்களுக்கு www.allaboutcookies.org என்பதைப் பார்வையிடவும்

 

குக்கீகள் மீதான கட்டுப்பாடு

நீங்கள் தேர்ந்தெடுக்கும் முன்னுரிமை நிலைக்கான குக்கீகளை மட்டுமே நாங்கள் படிப்போம் அல்லது எழுதுவோம். உங்கள் உலாவியானது JavaScript-ஐ ஆதரிக்கவில்லை என்றால், உங்கள் இணைய உலாவி அமைப்புகள் மூலம் குக்கீ விருப்பங்களை நிர்வகிக்க வேண்டும். உங்கள் உலாவி மூலம் அனைத்துக் குக்கீகளையும் முடக்கினால், இந்தத் தளத்தின் வரையறுக்கப்பட்ட அம்சங்கள் மட்டுமே செயல்படக்கூடும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Western Union இணையதளங்களைப் பார்வையிடும்போது மூன்று வகையான குக்கீகள் பயன்படுத்தப்படலாம்

  • பரிவர்த்தனைசார் குக்கீகள் – இவை அத்தியாவசிய அம்சங்களுக்காக உங்கள் இணையதள வருகையின்போது பயன்படுத்தப்படும் குக்கீகள் ஆகும். பயன்படுத்தப்பட வேண்டிய நாடு மற்றும் மொழியை அடையாளம் காணுதல், பரிவர்த்தனையைச் செயலாக்குதல், நீங்கள் இணையதளத்தின் எந்தப் பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை அடையாளம் காணுதல் (எ.கா. மொபைல் அல்லது டெஸ்க்டாப்), மோசடியைக் கண்டறிதல் மற்றும் தடுத்தல், இணக்கத்தன்மை மற்றும் இணையதள ஸ்திரத்தன்மையை எளிதாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். இந்தக் குக்கீகள் தளத்தை இயக்கத் தேவையானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வகை குக்கீகளின் எடுத்துக்காட்டுகளானவை:

Western UnionBigIPCookie; Server_Cookie; CookieOptin; SessionID; WUCountryCookie; WULanguageCookie; and JSessionID.
  • செயல்திறன் குக்கீகள் – இந்தக் குக்கீகள் எங்கள் இணையதளத்தின் செயல்திறன் மற்றும் உங்கள் இணையதளப் பயன்பாடு பற்றிய தகவல்களைச் சேகரிக்கும், அதாவது நீங்கள் பார்வையிடும் பக்கங்கள், ஏதேனும் பிழைகளை நீங்கள் சந்தித்தால், தளத்தில் உள்ள சரிசெய்தல் சிக்கல்களுக்கு Western Union-க்கு உதவுதல், இணையதளத்தின் வெவ்வேறு பகுதிகளின் பயன்பாடு எவ்வளவு என்பதை அடையாளம் காணுதல். இந்த குக்கீகள் பொதுவாகப் புள்ளிவிவர, பெயரற்ற தகவல்களைச் சேகரிக்கின்றன. அனைத்து தகவல்களும் ரகசியமானது மற்றும் உங்கள் வலைத்தள அனுபவத்தை மேம்படுத்தவும், உங்கள் ஆர்வங்கள் என்ன என்பதைப் புரிந்துகொள்ளவும் மற்றும் சந்தைப்படுத்தல் செயல்திறனை அளவிடவும் எங்களுக்கு உதவ மட்டுமே பயன்படுத்தப்படும். இவற்றில் இருந்து விலக விரும்பினால், எங்கள் குக்கீ அமைப்புகள் கருவியைப் பயன்படுத்தவும்.

இந்த வகையின் எடுத்துக்காட்டுகள் கீழே உள்ளன, அவை எங்கள் கூட்டாளர்களால் வழங்கப்படுகின்றன.

கூட்டாளர்விளக்கம்
ஆம்னிச்சர்‘வெப் அனலிட்டிக்ஸ்’ எனப்படும் ஆம்னிச்சரின் மென்பொருள் Western Union வழியான பக்கப் பயன்பாடு, பக்கத் தொடர்புகள் மற்றும் பாதைகளைப் பற்றிய புள்ளிவிவரப் பகுப்பாய்வுகளை மேற்கொள்ள இவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆன்-சைட் பரிவர்த்தனையின் போது வாடிக்கையாளர்கள் வழங்கும் சில தகவல்களை நாங்கள் பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்களை அடையாளம் காணவும் அவர்களின் தனிப்பட்ட நடத்தைகள் மற்றும் தேவைகளை இன்னும் துல்லியமாகப் புரிந்துகொள்ளவும் இந்தத் தகவல் அனுமதிக்கிறது.
TeaLeafசாத்தியமான இணையதளச் சிக்கல்களைத் தீர்க்கும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது பயனரின் இணையதள அனுபவத்தை மதிப்பாய்வு செய்யவும், சிக்கல்களைக் கண்டறிந்து தீர்க்கவும் ஒரு முறையை வழங்குகிறது.
  • மார்க்கெட்டிங் குக்கீகள் – உங்களுக்கு மார்க்கெட்டிங்கை வழங்கவும், மார்க்கெட்டிங்கின் வெற்றியை அளவிடவும் இந்தக் குக்கீகள் எங்களுக்கு உதவுகின்றன, மேலும் Western Union மற்றும் மூன்றாம் தரப்பினரால் வழங்கப்படும் கருத்துக்கணிப்புகள், மார்க்கெட்டிங் கோரிக்கைகள், ‘லைக்’ பொத்தான்கள் மற்றும் உங்கள் வருகை பற்றிய தகவல்களைப் பயன்படுத்தக்கூடிய Facebook போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களை இணைத்தல் போன்ற 3வது தரப்பினரின் ‘பகிர்வு’ பொத்தான்கள் போன்ற சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து விலக விரும்பினால், நீங்கள் எங்கள் குக்கீ அமைப்புகள் கருவியைப் பயன்படுத்தலாம்

இந்த வகைக் குக்கீகளை வைக்கும் எங்கள் கூட்டாளர்கள் கீழே உள்ளனர்.

கூட்டாளர்கள்குறிக்கோள்
DoubleClickஎங்கள் ஆன்லைன் விளம்பர சப்ளையர், பிற தளங்களில் எங்கள் இணைய விளம்பரங்களை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
Affiliate Windowவிளம்பரம் மற்றும் கமிஷன் பேமெண்ட்களை எளிதாக்க, எங்கள் தளத்திற்குப் பார்வையாளர்கள் எப்படி வந்திருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க, அதில் உள்ள இணைப்பு நெட்வொர்க் உதவுகிறது.
Net Boosterவிளம்பரம் மற்றும் கமிஷன் பேமெண்ட்களை எளிதாக்க, எங்கள் தளத்திற்குப் பார்வையாளர்கள் எப்படி வந்திருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க, அதில் உள்ள இணைப்பு நெட்வொர்க் உதவுகிறது.
Trade Doublerவிளம்பரம் மற்றும் கமிஷன் பேமெண்ட்களை எளிதாக்க, எங்கள் தளத்திற்குப் பார்வையாளர்கள் எப்படி வந்திருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க, அதில் உள்ள இணைப்பு நெட்வொர்க் உதவுகிறது.
Commission Junctionவிளம்பரம் மற்றும் கமிஷன் பேமெண்ட்களை எளிதாக்க, எங்கள் தளத்திற்குப் பார்வையாளர்கள் எப்படி வந்திருக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க, அதில் உள்ள இணைப்பு நெட்வொர்க் உதவுகிறது.

சில சந்தர்ப்பங்களில், இந்தக் குக்கீகளில் சில மூன்றாம் தரப்பினரால் எங்களுக்காக நிர்வகிக்கப்படுகின்றன, எனினும் மேலே பட்டியலிடப்பட்டுள்ளதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் குக்கீகளைப் பயன்படுத்த மூன்றாம் தரப்பினரை நாங்கள் அனுமதிப்பதில்லை.

உங்கள் கணினியிலிருந்து 3ஆம் தரப்புக் குக்கீகளை அகற்ற, உங்கள் உலாவி அமைப்புகளின் மூலம் குக்கீ விருப்பங்களை நீங்கள் நிர்வகிக்க வேண்டியிருக்கும்.

மேலும் அறிக

குக்கீகள் பற்றிய கூடுதல் விவரங்களை
https://www.allaboutcookies.org
மற்றும் https://www.youronlinechoices.eu என்பதில் காணலாம்