உங்களுக்கு விருப்பமான முறையைத் தேர்ந்தெடுத்து, இந்த எளிய படிகளைப் பின்பற்றவும்.
ரொக்கமாகப் பணத்தைப் பெறுவது
வங்கிக் கணக்கு
மலேசியாவில் 2,400+ ஏஜென்ட் இருப்பிடங்கள் மற்றும் உலகம் முழுவதும் 5,25,000+ ஏஜென்ட் இருப்பிடங்கள்1 மூலம், நீங்கள் எப்போதும் உங்களுக்கு அருகில் ஒன்று இருப்பதைக் காணலாம்.
ஏஜென்ட் இருப்பிடத்தில் பணத்தை எவ்வாறு பெறுவது
1. இருப்பிடத்தைத் தேர்வுசெய்யவும். எங்கள் ஏஜென்ட் இடமறிவானைப் பயன்படுத்தி உங்களுக்கு அருகிலுள்ள Western Union ஏஜென்ட் இருப்பிடத்தைக் கண்டறியவும்.
2. உங்கள் அனுப்புநரின் விவரங்களைப் பெறவும். உங்கள் அனுப்புநரின் பெயர், அனுப்பிய தொகை மற்றும் பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN) ஆகியவற்றை அறிந்திருங்கள்.
3. ஏஜென்ட் இருப்பிடத்தைப் பார்வையிடவும். அரசு வழங்கிய புகைப்பட ID-ஐக் கண்டிப்பாகக் கொண்டு வரவும்.
4. பணத்தைப் பெறவும். உங்களின் விவரங்கள் உறுதி செய்யப்பட்ட உடனேயே பணம் கிடைக்கும்.
எனது பணத்தை நான் எங்கே எடுப்பது?
உங்கள் அனுப்புநர் பணப் பரிமாற்றத்தை முடித்த பிறகு, உங்கள் பணம் நிமிடங்களில்2 பிக்-அப் செய்யக் கிடைக்கும். உங்கள் வசதிக்காக நீங்கள் உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணிக்கலாம்.
மலேசியாவில் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட எந்த ID ஏற்றுக்கொள்ளப்படுகிறது?
• பாஸ்போர்ட்
• மலேசிய அடையாள அட்டை
• ஓட்டுநர் உரிமம்
• புகைப்படத்துடன் கூடிய குடியிருப்பு அனுமதி
• புகைப்படத்துடன் கூடிய பணி அனுமதி
• அவசரகால பாஸ்போர்ட்
• UNHCR கார்டு
• இராணுவம்/காவல்துறை/அரசு ID
• i-Kad
உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறுங்கள்
உங்கள் மலேசியன் அல்லது வெளிநாட்டு வங்கிக் கணக்கில்3 நேரடியாகப் பணத்தைப் பெற Western Union உங்களை அனுமதிக்கிறது.
மலேசியாவில் உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறுவது எப்படி
பின்வரும் விவரங்களை அனுப்புநரிடம் நீங்கள் வழங்க வேண்டும்:
• உங்கள் வங்கியின் பெயர் மற்றும் குறியீடு
• உங்கள் வங்கிக் கணக்கில் உங்கள் பெயர் தோன்றும்
• உங்கள் வங்கிக் கணக்கு எண்
வெளிநாட்டில் உள்ள உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைப் பெறுவது எப்படி
இந்தச் சேவை உங்கள் நாட்டில் கிடைக்கிறதா மற்றும் நீங்கள் வழங்க வேண்டிய விவரங்கள் பற்றிய தகவல்களுக்கு, எங்கள் வங்கிக்கு நேரடியாக அனுப்பும் நாட்டின் தகவல்களைப் பார்க்கவும்.
எனது பணத்தை நான் எப்போது பெறுவேன்?
இது நாட்டுக்கு நாடு மாறுபடும். இது ஒரே நாளில் இருக்கலாம் எனினும் ஐந்து வேலை நாட்கள்4 வரையும் ஆகலாம். மேலும் விவரங்களுக்கு எங்கள் வங்கிக்கு நேரடியாகப் பரிமாறும் நாடுகளின் தகவல்களைப் பார்க்கவும். அதற்கு மாற்றாக, ஆன்லைனில் உங்கள் பரிமாற்றத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.
எங்கள் ஐயமும் தீர்வும் பகுதியைப் பார்வையிடவும் அல்லது எங்கள் வாடிக்கையாளர் ஹெல்ப்லைன் மூலம் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
1 31 மார்ச் 2018-இன்படியான நெட்வொர்க் தரவு.
2 தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை, தாமதமான டெலிவரி விருப்பங்களின் தேர்வு, அனுப்பப்பட்ட தொகை, சேருமிட நாடு, செலாவணி இருப்பு, ஒழுங்குமுறைச் சிக்கல்கள், நுகர்வோர் பாதுகாப்புச் சிக்கல்கள், அடையாளத் தேவைகள், விநியோகக் கட்டுப்பாடுகள், ஏஜென்ட் இருப்பிட நேரம் மற்றும் நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் (ஒட்டுமொத்தமாக, “கட்டுப்பாடுகள்”) போன்ற குறிப்பிட்ட காரணிகளைப் பொறுத்து சேவை மற்றும் நிதி தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் இருக்கலாம். கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்; விவரங்களுக்கு எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பாருங்கள்.
3 வங்கிக் கணக்குத் தகவல்களை வழங்கும்போது கவனமாகச் செயல்படவும். நீங்கள் வழங்கிய கணக்கு எண்ணுடன் தொடர்புடைய வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும். பெறுநரின் கணக்கு உள்ளூர் செலாவணி கணக்காக இருக்க வேண்டும்.
4 பெறுநரின் வங்கி விடுமுறை நாட்கள் தவிர்த்து.