திறம் மிக்கவராக இருங்கள், கற்றுக்கொள்ளுங்கள் மற்றும் மோசடியைத் தடுத்து நிறுத்துங்கள்

தகவலறிந்து பாதுகாப்பாக இருங்கள். உங்களிடம் எந்த அளவுக்கு அதிகமான தகவல்கள் இருக்கிறதோ, அந்த அளவுக்குக் குற்றவாளிகளிடமிருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளலாம். மோசடியைப் புகாரளிக்கவும், சமீபத்திய மோசடிகளைப் பற்றிய புதுப்பிப்புகளைப் பெற்ற நிலையில் இருக்கவும், மேலும் இந்தக் கூடுதல் ஆதாரங்களைக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகளை எவ்வாறு கண்டறிவது என்பதை அறியவும்.

மோசடியின் வகைகள்
மோசடி செய்பவர்கள் ஏமாற்றப்படுவர்களை கவர்ந்திழுக்கப் பயன்படுத்தும் தந்திரங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள்.

மோசடியைப் புகாரளிக்கவும்
மோசடியைப் புகாரளிப்பது அதிக விழிப்புணர்வு மற்றும் சிறந்த கற்றலுக்கு வழிவகுக்கும்.

தகவலறிந்த நிலையில் இருங்கள்

கற்றல் மற்றும் விழிப்புணர்வு மூலம் பணப் பரிமாற்ற மோசடிகளினால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் பாதுகாக்க Western Union உதவுகிறது.

எங்கள் எச்சரிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகளைப் பின்பற்றவும்

மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

நண்பர்களுக்கும், குடும்பத்திற்கும் பணம் அனுப்புவதற்கு Western Unionஐ மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் நேரில் சந்திக்காத எந்தவொரு நபருக்கும் பணம் அனுப்பவே அனுப்பாதீர்கள்.

மோசடி செய்பவர்கள் சில நேரங்களில் பணத்தை மாற்ற மக்களை ஊக்குவிக்கிறார்கள். பணம் அனுப்பும்படி கேட்கும் எவருக்கும் பணத்தை மாற்ற வேண்டாம்:

  • நீங்கள் உறுதிப்படுத்தாத ஒரு அவசரகால சூழ்நிலை.
  • ஒரு ஆன்லைன் கொள்முதலுக்கு.
  • வைரஸ் எதிர்ப்புப் பாதுகாப்புக்காக.
  • ஒரு வாடகை சொத்தின் மீதான ஒரு வைப்புத்தொகை அல்லது செலுத்துதலுக்காக.
  • வெற்றிபெற்ற லாட்டரி அல்லது பரிசுகளை பெறுவதற்காக.
  • வரி செலுத்துவதற்காக.
  • தொண்டுக்கான நன்கொடைக்காக.
  • ஒரு மர்மமான பொருட்களை வாங்குதல் பணிக்காக.
  • வேலை வாய்ப்புக்காக.
  • ஒரு கடன் அட்டை அல்லது கடன் கட்டணத்திற்காக.
  • ஒரு குடியேற்றப் பிரச்சினையை தீர்ப்பதற்காக.
  • டெலிமார்க்கெட்டிங் அழைப்புக்கு எதிர்வினையாற்றும் பொருட்டுப் பணம் செலுத்துதல்.

பணத்தை நீங்கள் அனுப்பினால், நீங்கள் யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அந்த நபர் பணத்தை விரைவாகப் பெற்றுவிடுவார். பணம் கொடுக்கப்பட்ட பிறகு, நீங்கள் மோசடிக்கு ஆளானாலும் கூட, சில வரையறைக்குட்பட்ட சூழல்களில் தவிர, வெஸ்டர்ன் யூனியன் உங்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க முடியாமல் போகலாம்.

நீங்கள் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக நீங்கள் நம்பினால், 6336 2000.என்ற எண்ணில் உள்ள Western Union மோசடி அவசர தொலைபேசி தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளவும்.

மோசடி பற்றிய விழிப்புணர்வுப் பிரசுரங்கள்

Be_sure_everything_is_as_it_seems_2018

மோசடி விழிப்புணர்வுப் பிரசுரம்

பதிவிறக்கங்கள்:
ஆங்கில PDF மேண்டரின் PDF வியட்னாமீஸ் PDF தமிழ் PDF ஹிந்தி PDF

snowbird

முதியோர் மோசடி விழிப்புணர்வுப் பிரசுரம்

பதிவிறக்கங்கள்:
ஆங்கில PDF

Interdiction_Card_image_en

தடை அட்டை

பதிவிறக்கங்கள்:
ஆங்கில PDF