சிங்கப்பூரில் இருந்து வியட்நாமிற்குப் பணம் பரிமாற்றம் செய்யுங்கள். Western Unionஇன் நம்பகமான பணப் பரிமாற்றச் சேவையின் மூலம் ஆன்லைனிலிருந்தோ அல்லது நேரடியாகவோ, வீட்டிலிருந்தோலோ அல்லது பயணத்தின்போதோ பணத்தை அனுப்பலாம்.
உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்
உங்கள் பரிமாற்றங்களை மறைகுறியாக்கம் செய்கிறோம்
உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்
உங்கள் தரவைப் பாதுகாப்பாக வைத்திருக்கக் கடமைப்பட்டுள்ளோம்
வியட்நாமில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்குச் சிங்கப்பூரில் இருந்து விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் பணம் அனுப்புவதற்கு Western Union உங்களுக்கு உதவும். உங்கள் பணத்தை அனுப்புவதற்கு பின்பற்ற வேண்டிய நான்கு முக்கிய படிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
வியட்நாமிற்கு ஆன்லைனில் பணம் அனுப்பத் தொடங்க, இலவசக் கணக்கில்உள்நுழைக அல்லது பதிவு செய்க.
உங்கள் பணம் சென்றடைய வேண்டிய நாடாக வியட்நாமைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுங்கள்.
பணம் பெறுதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பெறுநரின் விவரங்களை உள்ளிடுங்கள் அல்லது நீங்கள் ஏற்கனவே பணம் அனுப்பியிருந்தால், ஏற்கனவே உள்ள விவரங்களைத் தேர்ந்தெடுங்கள்.
உங்கள் பேமெண்ட் முறையைத் தேர்ந்தெடுத்து (பரிவர்த்தனை சென்றடைய எதிர்பார்க்கப்படும் கால அளவு காண்பிக்கப்படும்) பணத்தை வியட்நாமிற்கு அனுப்புங்கள்.
அன்புக்குரியவரின் பிறந்தநாளுக்கு நீங்கள் பணம் அனுப்ப விரும்பினாலும், புதிய வணிக வாய்ப்பில் அவர்களுக்கு ஆதரவளிக்க விரும்பினாலும் அல்லது அவர்களின் மாதாந்திர பில்களைச் செலுத்த உதவ விரும்பினாலும், சிங்கப்பூரில் இருந்து வியட்நாமிற்குப் பணம் அனுப்ப நாங்கள் வழங்கும் பணப் பரிமாற்ற விருப்பங்கள் மூலம் Western Union உடன் இதை மேற்கொள்ளலாம்.
வியட்நாமிற்கு எவ்வாறு பணம் அனுப்புவது
வியட்நாமிற்குப் பணத்தை எவ்வாறு பெறுவது
நீங்கள் ஒரு இலவச சுயவிவரத்தை உருவாக்கி அல்லது உள்நுழைந்து, ஒரு சில கிளிக்குகளில் வியட்நாமில் இருக்கும் அன்புக்குரியவர்களுக்கு பணத்தை அனுப்பலாம்.
ஆன்லைனில் பணம் அனுப்புதல்பணப் பரிமாற்றத்தை நீங்கள் நேரடியாக மேற்கொள்ளலாம். சிங்கப்பூர் முழுவதும் உள்ள எங்கள் கிளைகளில் ஒன்றிற்குச் செல்லுங்கள்.
உங்கள் கிளையைக் கண்டறிதல்எங்கள் செயலியின் மூலம், நீங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பயணத்தின்போதோ, வங்கிப் பரிமாற்றம், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலமாக வியட்நாமிற்குப் பணத்தை அனுப்பலாம்4.
செயலியைப் பதிவிறக்குகவியட்நாமில் உள்ள உங்கள் அன்புக்குரியவரின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணத்தை அனுப்பலாம்.
வியட்நாம் முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும்2 மேற்பட்ட Western Union கிளைகளில் ஏதேனும் ஒன்றில் பணத்தை ரொக்கமாகப் பெறும் வகையில் அனுப்புங்கள்.
உங்கள் அன்புக்குரியவர் வியட்நாமில் எங்கிருந்தாலும் அவர்களின் மொபைல் வாலட்5 க்கு பணத்தை நேரடியாக அனுப்பலாம்.
இன்றே உங்கள் கணக்கை இலவசமாகத் தொடங்கி சிங்கப்பூரில் இருந்து வியட்நாமிற்கு எளிதான மற்றும் சுலபமான முறையில் ஆன்லைன் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுங்கள்.
எங்களின் மறைக்குறியாக்கம் மற்றும் மோசடி தடுப்பு முயற்சிகளானது உங்கள் Western Union பணப் பரிமாற்றங்களைப் பாதுகாப்பதற்கு உதவுகின்றன.
சிங்கப்பூரில் இருந்து வியட்நாமிற்குப் பணப் பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்கள்3 மற்றும் நாங்கள் வழங்கும் அந்நிய செலாவணி விகிதங்கள்3 அத்துடன் பரிமாற்றம் செய்வதற்கான அதிபட்சத் தொகை ஆகியவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வங்கி பரிமாற்றம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு4 அல்லது ரொக்கமாகச் செலுத்துதல் என உங்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் வியட்நாமிற்குப் பணத்தை அனுப்பலாம்.
வியட்நாமில் உள்ள அன்புக்குரியவர்கள் எங்கு வசித்து வந்தாலும், நாடு முழுவதும் உள்ள ஆயிரத்திற்கும்2 மேற்பட்ட முகவர் இருப்பிடங்ககளில் ஏதேனும் ஒன்றுக்குச் சென்று நேரடியாகப் பணத்தைப் பெறலாம்.
தனிப்பட்ட கண்காணிப்பு எண்ணை (MTCN) பயன்படுத்திச் சிங்கப்பூரில் இருந்து வியட்நாமிற்குப் பணம் அனுப்பும் போது, உங்கள் பணப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கலாம்.
பணம் அனுப்புதல் மற்றும் பெறுதல் முறைகளைப் பொறுத்து, வியட்நாமில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் மேற்கொள்ளும் பணப் பரிமாற்றம் சில நிமிடங்களில் நிறைவடையும்1.
உங்கள் பெறுநரின் விவரங்களைச் சேமிக்க முடியும் என்பதால், வியட்நாமில் உள்ள அன்புக்குரியவர்களுக்கு ஆன்லைனில் மீண்டும் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வது விரைவானதாகவும் எளிதானதாகவும் இருக்கும்.
எங்கிருந்தும் பணத்தை அனுப்பலாம் அல்லது பரிமாற்றத்தைத் தொடங்கி, முகவர் இருப்பிடத்திற்குச் சென்று பணத்தைச் செலுத்தலாம்.
வியட்நாமிற்கு நீங்கள் மேற்கொண்ட பணப் பரிமாற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்.
வியட்நாம் முழுவதும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மீண்டும் விரைவாக அனுப்பலாம்.
வியட்நாமில் காணப்படும் பெரும்பாலான முக்கிய வங்கிகளுடன் நாங்கள் உறவு கொண்டுள்ளோம்
சிங்கப்பூரில் இருந்து நேரடியாக வியட்நாம் முழுவதும் உள்ள பெரும்பாலான வங்கிகளுக்கு பணத்தை அனுப்பலாம்.
நீங்கள் அனுப்பும் முன் பணப் பரிமாற்ற மதிப்பீட்டை இலவசமாகப் பெறலாம்
நீங்கள் அனுப்புவதற்கு முன் வியட்நாமிற்கு ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கான செலவைக்3 கண்டறிந்து, எந்தவித தயக்கமும் இல்லாமல் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
பெறுநரின் விவரங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருங்கள்
வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்ப, பெறுநரின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களைத் தயார் நிலையில் வைத்திருங்கள்.
டானாங்கில் நடைபெறும் திருமண விழாவோ, ஹனோயில் நடைபெறும் பிறந்தநாள் கொண்டாட்டமோ, புதிய தொழில் வாய்ப்புகளுக்காகவோ அல்லது உங்கள் அக்கறையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்போ, எதுவாயினும் சிங்கப்பூரில் இருந்து வியட்நாமிற்கு ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்வதற்கு Western Unionஉதவுகின்றன.
சிங்கப்பூரில் இருந்து வியட்நாமில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் பணத்தை வழங்குவதற்குச் சிறந்த வழி, நம்பகமான பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்துவதாகும்.
நீங்கள் Western Union ஐப் பயன்படுத்தும்போது, உங்கள் பெறுநர் ரொக்கத்தை விரும்பினாலும் சரி அல்லது வங்கிப் பரிமாற்றத்தை அல்லது மொபைல் வாலெட்டை விரும்பினாலும் சரி5, அவர்களுக்குப் பொருத்தமான வகையில் பணத்தைப் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம்.
வியட்நாமில் உள்ள உங்கள் அனுப்புக்குரியவருக்கு நீங்கள் மேற்கொண்ட பணப் பரிமாற்றத்திற்கான சரியான கால அவகாசமானது, அனுப்புதல் மற்றும் பெறுதல் முறைகளைப் பொறுத்தது.
பெறுநர் ரொக்கமாகப் பெறுவதற்காக SGDஇலிருந்து VND க்கு ரொக்கமாக அனுப்புதல், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு4மூலம் அனுப்புதல் போன்றவற்றை மேற்கொண்டால், அவை நிமிடங்களில் சென்றடையும்1. பணம் அனுப்பும் மற்றும்/அல்லது பெறும் முறையாக வங்கிப் பரிமாற்றம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அதற்கு வழக்கமாக 1 வணிக நாள் வரை ஆகும்1.
வியட்நாமில் உள்ள அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் மேற்கொள்ளும் பணப் பரிமாற்றம் பாதுகாப்பாகச் சென்றவதை உறுதிசெய்வதற்கு, பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் நற்பெயர் பெற்ற பணப் பரிமாற்றச் சேவையைப் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும்.
எங்களின் மறைகுறியாக்கம் மற்றும் மோசடி தடுப்பு முயற்சிகளானது Western Union மூலம், வியட்நாமில் இருந்து பொலிவியாவிற்கு நீங்கள் மேற்கொள்ளும் பணப் பரிமாற்றங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கு உதவுகின்றன.
சிங்கப்பூரில் இருந்து வியட்நாமிற்குப் பணத்தை எவ்வாறு பரிமாற்றம் செய்வது என்பது பற்றி நீங்கள் போதுமான அளவு படித்துத் தெரிந்துகொண்டிருந்தால், நீங்கள் விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் Western Union மூலம் பணப் பரிமாற்றம் செய்யலாம்.
சிங்கப்பூரில் இருந்து வியட்நாமிற்கு எவ்வாறு பணப் பரிமாற்றம் செய்வது என்பது குறித்து மேலும் கேள்விகள் இருந்தால், நீங்கள் எங்களின் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது எங்கள் குழுவை நேரடியாகத் தொடர்புகொள்ளலாம்.
எங்களின் வாடிக்கையாளர் சேவைக் குழு உங்களுக்கு ஆதரவளிக்க எப்போதும் தயாராக உள்ளது:
ஆங்கிலம்: 24/7
மாண்டரின்: காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை, தினந்தோறும்
1 அனுப்பிய தொகை, சென்றடையக் கூடிய நாடு, நாணய இருப்பு, ஒழுங்குமுறை மற்றும் அந்நியச் செலாவணி சிக்கல்கள், தேவையான பெறுநரின் செயல்(கள்), அடையாளத் தேவைகள், முகவர் இருப்பிட நேரம், நேர மண்டலங்களில் உள்ள வேறுபாடுகள் அல்லது தாமதமாக அனுப்புவதற்கு தேர்வு செய்யப்பட்ட விருப்பங்கள் உள்ளிட்ட சில பரிவர்த்தனையின் நிபந்தனைகளின் அடிப்படையில் நிதிப் பரிவர்த்தனை தாமதமாகலாம் அல்லது சேவைகள் கிடைக்காமல் போகலாம்.
2 31 டிசம்பர் 2021 இன் படியான நெட்வொர்க் தரவு.
3 Western Union நாணயப் பரிமாற்றம் மூலம் பணம் ஈட்டுகிறது. பணப் பரிமாற்றியைத் தேர்ந்தெடுக்கும்போது, பரிமாற்றக் கட்டணம் மற்றும் மாற்று விகிதங்கள் இரண்டையும் கவனமாக ஒப்பிட்டுப் பார்க்கவும். கட்டணங்கள், அந்நிய செலாவணி விகிதங்கள் மற்றும் வரிகள் ஆகியவை பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பிராண்டு, சேனல் மற்றும் இருப்பிடத்தின் அடிப்படையில் மாறுபடலாம். கட்டணங்கள் மற்றும் விகிதங்கள் அறிவிப்பு இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை.
4 சில கார்டு வழங்குநர்கள் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதற்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் கார்டு வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
5 பெறுநரின் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்கில் வரவு வைப்பதற்காக பெறுநரின் mWallet கணக்குச் சேவை வழங்குநருக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படும். மூன்றாம் தரப்பு கட்டணங்கள் கூடுதலாக விதிக்கப்படலாம், இதில் SMS மற்றும் கணக்கிற்கான மிதமிஞ்சிய வரம்பு மற்றும் கேஷ்-அவுட் கட்டணங்கள் ஆகியவை அடங்கும். சேவை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிதிப் பரிவர்த்தனை கிடைக்கும். கட்டுப்பாடுகளுக்கு மொபைல் படிவத்தைப் பார்க்கவும்.
எங்கிருந்தும் பணத்தை அனுப்பலாம் அல்லது பரிமாற்றத்தைத் தொடங்கி, முகவர் இருப்பிடத்திற்குச் சென்று பணத்தைச் செலுத்தலாம்.
வியட்நாமிற்கு நீங்கள் மேற்கொண்ட பணப் பரிமாற்றத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கலாம்.
வியட்நாம் முழுவதும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மீண்டும் விரைவாக அனுப்பலாம்.